ஈரானின் அணு உலைகள் தாக்கப்படவில்லை! ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு அறிக்கை
இஸ்ரேல் - அமெரிக்கா ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் எந்த அணு நிலையங்களையும் தாக்கியதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு (UN nuclear watchdog) தெரிவித்துள்ளது.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத் International Atomic Energy Agency (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி (Rafael Grossi) தெரிவித்துள்ளதாவது:
ஈரானில் பாதிப்புக்குள்ளாகாத அணு நிலையங்கள்
ஈரானில் உள்ள அணு நிலையங்களின் நிலை குறித்து இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புஷெஹ்ர் அணு மின் நிலையம் Bushehr Nuclear Power Plant, தெஹ்ரான் ஆராய்ச்சி அணு உலை Tehran Research Reactor அல்லது ஏனைய அணு எரிபொருள் சுழற்சி நிலையங்கள் உள்ளிட்ட எந்த அணு நிலையமும் சேதமடைந்ததாகவோ தாக்கப்பட்டதாகவோ எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றார்.
இதுவரை, ஈரானை அண்டியுள்ள நாடுகளில் இயல்பான பின்னணி அளவை விட அதிகமான கதிர்வீச்சு உயர்வு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
க்ரோஸ்ஸியின் (Rafael Grossi) இந்தக் கருத்துக்கள், ஈரானின் மூன்று முக்கிய அணு நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) தாக்கப்பட்டதாக ஈரானின் IAEA தூதுவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணு ஆயுத விரிவாக்கல் அச்சுறுத்தலை அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஒரு காரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி, “இராணுவ ரீதியாக பயன்படும்” கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்க ஈரான் இன்னும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு