ஊழல் இன்மையால் சர்வதேச உதவிகள் தாராளம் - ரில்வின் விளக்கம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப் பெறுகின்றன என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- "இலங்கை அரசு மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின் கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை
இந்த ஆட்சியின் கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது எனச் சிலர் கூறி வந்தாலும் அது பொய் என்பது உறுதியாகியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நாட்டு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். இவர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு அரசு உதவிகளை வழங்கும். மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட அனைத்து நிவாரண உறுதிமொழிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam