புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பில் இணக்கத்திற்கு வந்த கோட்டாபய: தேரர் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டின் அடுத்த பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டினை ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி கட்சி சாரா பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய அமைதியற்ற நிலைமைக்கு முன்னாள் பிரதமர் உட்பட அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஓமல்பே சோபித தேரர் சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 59 நிமிடங்கள் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri