நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரதமர்
புதிய இணைப்பு
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த மாணவர் போராட்டத்தில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து நிலைமை மோசமாகியுள்ளது.
வளர்முக நாடு ஒன்றிற்கு பயணம்
இதேவேளை, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பதவியிலிருந்து விலகிய பிரதமர் ஷேக் ஹசீனா அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் பங்களாதேஷை விட்டு வெளியேறியுள்ளதுடன் டெல்லியில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் (Hindon Air Force Station) அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
அத்துடன், பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிலிருந்து வளர்முக நாடு ஒன்றிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயப் போராட்டத்தை அடுத்து டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
பங்களாதேஷில் (Bangladesh) இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவதளபதி வகெர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவதளபதி இடைக்கால அரசாங்கம் குறித்து விபரித்துள்ளார்.
எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஜனாதிபதியை சந்திக்கப்போகின்றேன் இன்றைய நாளிற்குள் தீர்வு ஒன்று சாத்தியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நான் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் பங்களாதேஷ் மக்களிற்கு நீதி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |