துணிந்து களமிறங்க ரணில் முடிவு செய்தது ஏன்...! திரைமறைவில் நடப்பது இதுதான்....
இலங்கையின் அரசியலில் என்ன நடக்கிறது? எவருக்கும் இன்னும் தெளிவில்லை. இருப்பினும் அரசியல் கட்சிகளின் காய்நகர்த்தல்கள் எவையும், நாட்டுக்காக அன்றி சொந்த கட்சி வளர்ச்சிக்காகவே என்பது மாத்திரம் தெளிவான விடயம்.
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் வழமையான உற்சாசம் அவரிடம் இல்லை. காரணங்கள், எவருக்கும் தெரிந்த விடயங்கள்தான்.
சகோதரர்கள் தம்முடன் இல்லை. நாடே தமக்கு எதிராக உள்ளது. வெளியில் வரமுடியாத சூழ்நிலை. அண்மைக்காலம் வரையில் அதிகாரம் மிக்கவராக இருந்தபோதும், தற்போதும் அந்த அதிகாரங்களும் அர்த்தமில்லாமல் போய்விட்டன.
அதனைவிட இறுதியாக தமது சகோதரர், அரசியல் ஆசான் மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள், நாட்டுக்கு நெருக்கடியைக் காட்டிலும் தமக்கு பாரிய நெருக்கடியை உண்டாகியுள்ளமை என்பவற்றை கூறலாம்.
இது, தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுகின்றமை போன்று நாட்டுக்காக சொந்த உறவுக்கு எதிராக செயற்படவேண்டிய நிர்ப்பந்தம். எனினும் அந்த நிர்ப்பந்தத்துக்கு அவர் உள்ளாகவில்லை.
சகோதரர்களை பாதுகாப்பாகவே வைத்திருக்கிறார். எனினும் சகோதரர் தம் பக்கத்தில் இல்லை என்ற சோகம் அவரின் முகத்தில் தெரிந்தது. சரி, அது அவருடைய சொந்த விடயம். நாட்டுப் பிரச்சினைக்கு வருவோம்.
நாடு இன்று புதிய பிரதமர் ஒருவரை எதிர்பார்க்கிறது. அது பழைய முகமாக இருக்குமாக இருந்தால், அது இடைக்கால நிர்வாகமாக இருந்தாலும் கூட, துவண்டுப் போயுள்ள மக்களுக்கு அது சந்தோசத்தை கொடுக்காது என்பது யதார்த்தம்.
புதிய முகங்கள் வந்தால், மக்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படலாம். அதன்படி இடைக்காலத்துக்காவது. போராட்டங்களை ஓரளவு நம்பிக்கையுடன் இடைநிறுத்திக்கொள்ளமுடியும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஏற்கனவே ராசமாணிக்கம் சாணக்கியன் சொன்னது போன்று மகிந்த சரணங் கச்சாமி என்ற குற்றச்சாட்டுக்கு இணங்க, ரணில் அரசியல் காற்றே இலங்கையில் வீசிக்கொண்டிருக்கிறது.
தாம், மகிந்த சரணம கச்சாமி என்று எப்போதும் கூறவில்லை என்று ரணில் கூறினாலும், ரணில் பிரதமரானால், ராஜபக்சர்களுக்கு அது, சந்தோசமான செய்தியாகவே இருக்கும்.
ஏனெனில் ரணில், ராஜபக்சர்களுக்கு எதிராக செயற்படமாட்டார் என்ற நம்பிக்கை, ராஜபக்சர்கள் மத்தியில் மாத்திரமல்ல. நாட்டு மக்கள் மத்தியில் நிறையவே உள்ளது.
இதற்கு நல்லாட்சி அரசாங்க காலத்தின் செயற்பாடுகளை பலரும் உதாரணங்களாக சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவியேற்பாரா? அல்லது பிரதமர் யாராக இருந்தாலும் கௌரவமான இடத்தில் இருந்து அவருக்கு ஆதரவளிப்பாரா? என்பது அவரின் சொந்த முடிவை பொறுத்திருக்கிறது.
ஏனெனில் இடைக்கால நிர்வாகம் என்பது வெறுமனே, எடுத்தோம், செய்தோம் என்ற நிலையில் பார்க்கப்படாது அடுத்தகட்ட அரசியலுக்கும் அது அச்சாணியாக இருக்கப்போகிறது.
இதில் ரணிலுக்கு இருக்கும் வாய்ப்பை பார்த்தால், அவருக்கு அடுத்தக்கட்ட அரசியல் ஒன்று அவசியமில்லை என்றே கூறலாம். எனவே அவர் மீண்டும் ஒருமுறை பிரதமராக வருவதற்கு விருப்பம் கொள்ளக்கூடும்.
இதன்போது ராஜபக்சர்களுடன் இருந்து இறுமாப்பான அரசியலுக்கு பழகிப்போன பொதுஜன முன்னணியினரின் ஆதரவு ரணிலுக்கு ஆட்சிக்குள் பிரவேசிக்க போதுமாக இருக்கும். அத்துடன் நாட்டின் நலன் என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகளும் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கலாம்.
எனினும் அமைச்சர்கள் நியமனங்களின்போது, மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளவர்கள்தான் மீண்டும் நியமிக்கப்படுவார்களாக இருந்தால், அது ரணிலின் பிரதமர் நிலைக்கு முதலாவது மக்கள் எதிர்ப்பாக மாறும்.
எனவே தமது பிரதமர் நிலைக்கு கீழ் பொதுஜன முன்னணியினர் தவிர்க்கப்படுவதையே ரணில் விரும்புவார். இதன்போது அவர் சஜித் தரப்பில் உள்ள சிலரின் ஆதரவை எதிர்பார்க்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
இங்கு பொதுமக்கள் என்பதை காட்டிலும் ரணிலுக்கு அல்லது புதிதாக வரும் பிரதமர் ஒருவருக்கு கோட்டாபயவை, அல்லது நாட்டு மக்களை திருப்திபடுத்துவதை விட, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை ஓரளவுக்காவது திருப்திப்படுத்தவேண்டியுள்ளது.
எனவே யார் பிரதமராக வந்தாலும் முட்கம்பியின் மீது நடந்து செல்லும் பிரதமராகவே அவர் இருப்பார். இந்தநிலையில் சஜித் பிரேமதாச, பிரதமர் நிலையை எடுப்பதற்கு தயங்கும் காரணங்களை ஆராயலாம்.
நேற்றைய சந்திப்புக்களின்படி சஜித் பிரேமதாச சர்வதேச நாடுகளின் உடனடியான நிதி ஆதரவை எதிர்பார்க்கிறார். எனினும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா என்பன வழங்கிய பதில்களை பொறுத்தவரை, சஜித்துக்கு முழுமை திருப்தியில்லை.
எனவே இடைக்கால அரசாங்கத்தை பாரமெடுத்து அதில் தோல்வி கண்டுவிட்டால், தமது முழு அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிடுமோ என்ற அச்சம் அவரிடம் இருப்பதை யதாரத்தமான விடயமாக கருதலாம்.
இதன்படி அவர் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மறுபுறத்தில் அவர் பிரதமராக பொறுப்பேற்காதுபோனால், கட்சிக்குள் பிளவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹரின் பெர்ணான்டோவின் முடிவு இதனை காட்டுகிறது.
சஜித் பிரேமதாச பிரதமராவதை கோட்டாபய ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள விருப்பம் கொண்டாலும், ரணில் விக்ரமசிங்கவும் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் விரும்பமாட்டார்கள் என்பதும் யதார்தமே. ஏனெனில் தமது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியை வைத்தவர் சஜித் என்ற கோபம் நிச்சயமாக ரணிலிடம் இருந்தே தீரும்.
அதேநேரம் அடுத்த கட்ட உச்ச நகர்வை எதிர்பார்க்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சஜித் பதவிக்கு வந்து தமது இயலுமையை காட்டிவிட்டால், அது தமது அரசியலுக்கு பின்னடைவாக மாறும் என்ற கருதுவதில் தவறில்லை.
அதேநேரம் ஜேவிபி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன பிரதமர் நிலையை எதிர்பார்க்கவில்லை என்றே கருதலாம்.
ஏனெனில் இடைக்கால நிர்வாகம் என்பது, முதலில் கூறியதுபோன்று வந்தோம், செய்தோம். சென்றோம் என்பதை காட்டிலும் எதிர்கால அரசியலுக்கு அச்சாணியாக இருக்கப்போகின்ற நிர்வாகம் என்பதை அந்தக்கட்சிகள் உணர்ந்தேயுள்ளன.
ஆகவே இலங்கையின் அரசியல் கொதிநிலையில் உள்ளது. இறுதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறும் இடைக்கால அரசாங்கம், நாட்டு மக்களுக்கு குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டத்தளத்துக்கு ஓரளவுக்காவது நம்பிக்கையை தருமா? என்பதே முதலாவது கேள்வியாக உள்ளது.
இதன்மூலம் கோட்டா கோ ஹோம் என்ற கோசம் தற்காலிகமாவது நிறுத்தப்படுமா? என்பதும் கேள்வியாக உள்ளது.
ஏனெனில் இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றங்கள் காலிமுகத்திடல் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அந்த நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமென்றால், பதவிக்கு வருகின்ற இடைக்கால நிர்வாகம், காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதலை தூண்டியதாக கூறப்படும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை, முதலாவது பாரிய பொறுப்பாக இருக்கும்.
இதனை செய்துவிட்டால் புதிய நிர்வாகத்துக்கு 4 அல்லது 6 மாதங்கள் என்பது பிரச்சினையான காலமாக இருக்காது. இல்லையேல், புதிது ஆனால் பழையது என்ற நிலைதான் தொடரும். நாடு அராஜக நிலைக்கு செல்வதை யாராலும் தடுக்கமுடியாது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 5 நிமிடங்கள் முன்

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022