பிரதமருக்கு தலையிடியாய் மாறியுள்ள சர்ச்சைக்குரிய பாடப் புத்தகம்! நீக்குவதற்கு தீர்மானம்
தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விடயங்கள் அடங்கிய பாடத்தினை அகற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குறித்த பாடத்தினை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி ஆலோசனைக் குழு நேற்றையதினம்(06.01.2025) ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(07.01.2025) இடம்பெற்று வரும் அமர்வின் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இதேவேளை, தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அரசியல் பரப்பில் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட சர்ச்சையை காரணமாக வைத்து பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri