சிறந்த வரவு - செலவுத் திட்டம்! - அமைச்சர் பந்துல கூறுகின்றார்
இலங்கை மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு - செலவுத் திட்டமாக இதனைப் பார்க்க முடிகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ரணில் அரசின் இடைக்கால வரவு - செலவுத் திடடம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டைப் பாதுகாக்கும் வரவு செலவுத் திட்டம்
வரலாற்றில் நாடு பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாத நிலை உள்ள போதும் கடன்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வரும் நிலையில் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான வரவு - செலவுத் திட்டமாக இதனைக் குறிப்பிட முடியும்.
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல், பொருளாதாரம், நிதி முகாமைத்துவம் போன்றவற்றை முறைப்படுத்துகின்ற சிறந்த கொள்கையுடனான திட்டங்களைக் கொண்ட வரவு - செலவுத் திட்டம் இது.
அந்தவகையில் இதன் மூலம் சட்டங்கள் பல திருத்தம் செய்யப்படுகின்றன. அரசு நிதி
தொடர்பான பொறுப்புக் கூறும் சட்டமும் திருத்தப்படுகின்றது என்றார்.