யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு இடைக்கால தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
மறுஅறிவித்தல் வரை தடை நீடிப்பு
சம்பவத்தின் போது சிரேஷ்ட மாணவர்களால் புதுமுக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட மூன்று சிரேஷ்ட மாணவர்களுக்கும், ஒரு புது முக மாணவனுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், சுதந்திரமான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு ஏதுவாக
அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களையும் மறுஅறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின்
அனைத்துப் பகுதிகளினுள்ளும் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன், கல்வி
மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்குத்
தடைவிதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா.
நிமலதாசன் அறிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
