இடைக்கால நிதி கணக்கீட்டை கொண்டு வரும் அரசாங்கம்:வாக்கெடுப்பில் தோற்றால் அரசாங்கம் கலைக்கப்படலாம்
அரசாங்கம் இடைக்கால நிதி ஒதுக்கீட்டு கணக்கீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த வியாழக் கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இது குறித்து அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்னர், இடைக்கால நிதி ஒதுக்கீட்டு கணக்கீடு ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிதியை ஒதுக்கிக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த முன்கூட்டிய இடைக்கால நிதி ஒதுக்கீட்டு கணக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், அரசாங்கத்தை கலைக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.