நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு

Parliament of Sri Lanka Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka
By Dev Dec 06, 2024 01:00 PM GMT
Report

புதிய இணைப்பு

2025ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (06.12.2024) கணக்கு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான குறித்த இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கான விவாதம், நேற்றையதினமும் இன்றையதினமும் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதையடுத்து தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசியலமைப்பு பேரவை குழுவிற்கு சிறீதரன் தெரிவு

இலங்கை அரசியலமைப்பு பேரவை குழுவிற்கு சிறீதரன் தெரிவு

முதலாம் இணைப்பு

2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும் இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் கணக்கறிக்கை மீது சபையில் நேற்று ஆரம்பமாகிய விவாதம் இன்றும் தொடரவுள்ளதுடன் இன்று மாலை இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், வாக்கெடுப்பின்போது இடைக்காலக் கணக்கறிக்கையை எதிர்ப்பதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தீர்மானம்

நேற்று இரவு நிகழ்நிலையில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு | Interim Accounts Vote Passed In Parliament

ஆயினும், பாதுகாப்புத்துறைக்கான செலவினம் உச்சமாக இருந்தால், இடைக்கால கணக்கறிக்கையை ஆதரிக்காமல் - வாக்கெடுப்பில் பங்குபற்றாமல் ஒதுங்குவது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கையைத் தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2 ஆயிரத்து 600 பில்லியன் ரூபா 2025 ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு இடைக்காலக் கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்காலக் கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரச வருவாய் 1600 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு | Interim Accounts Vote Passed In Parliament

அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டெழும் செலவீனங்களுக்கு 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு, வட்டி செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதனச் செலவுக்கு 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதால் காலதாமதங்கள் ஏற்பட்டால் அடிப்படைக் கடன் பெறும் வரம்பை 4 ஆயிரம் பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும், இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறையாண்மை கடன் பத்திரங்கைளை வெளியிடவும் அரசு இடைக்காலக் கணக்கறிக்கையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

மேலதிக தகவல் - ராகேஷ்

கோபா குழுவின் தலைவர் பதவி தொடர்பில் பிமல் ரத்நாயக்கவின் முக்கிய அறிவிப்பு

கோபா குழுவின் தலைவர் பதவி தொடர்பில் பிமல் ரத்நாயக்கவின் முக்கிய அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள்: சிறீதரனின் உரையால் சபையில் சூடுபிடித்த விவாதம்

ரஷ்ய இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள்: சிறீதரனின் உரையால் சபையில் சூடுபிடித்த விவாதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US