புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு
முல்லைத்தீவு - கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் புலனாய்வாளர்களால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கோப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தலிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர் சங்க வடமத்திய மாகாண இணைப்பாளர் ஜே.எம்.மில்லியாஸ், இலங்கை ஆசிரயர் சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கர மூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் 15.07.2021 கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு செய்தி அறிக்கையிடலுக்காகச் சென்ற ஊடகவியலாளர்கள், அங்கிருந்த புலனாய்வாளர்களின் செயற்பாடுகளால் செய்தி சேகரிப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களைச் சூழ்ந்து பாரிய அளவில் புலனாய்வாளர்களும் தமது கைபேசிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளனர். இதனால் ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்பிற்கு பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
