கடும் வறட்சியால் மழை வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள சர்வமத தலைவர்கள் (photos)
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை பெய்ய வேண்டி சர்வமத தலைவர்கள் மவுஸ்ஸாசாகலை நீர்த்தேக்கத்தில் மத வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் போது மறைந்து போன பழைய மஸ்கெலியா நகரின் ஆலயம், விகாரை, தேவாலயம் என்பன தற்போது தென்படுகின்ற நிலையில், அவ்விடங்களில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிகள், மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள், கெனியன் நீர் மின் நிலையத்தின் பொறியியலாளர்கள் மற்றும் பணியாளர்கள், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்க அணையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சமய வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
காலநிலை மாற்றம்
இந்த நாட்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 50% வரை குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
