வங்கிகள் மூலம் மக்களுக்கு நிவாரணம்! வங்கி வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு
வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொது மக்களுக்கு நிவாரணம்
மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடையக் கூடும். பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படும்.
பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம்
அத்துடன் கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானது.
இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன், 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |