வங்குரோத்து அடைந்துள்ள அரச வங்கிகள்..! வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் அரச வங்கிகள் ஏற்கனவே வங்குரோத்து நிலையிலேயே உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணம்
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் திவாலாவதை தடுக்க வங்கிகள் பணம் வழங்கியுள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தால் அரச வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும்?
எதிர்காலத்தில் வைப்பாளர்களின் வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் வைப்பு செய்யப்பட்ட பணம் கூட வராமல் போகலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரிச்சுமை
அத்துடன் மக்கள் ஏன் வளங்கள் நிறைந்த இந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுகிறார்கள். அவர்கள் செல்லும் சில நாடுகளில் இந்த அளவிற்கு வளங்கள் கூட இல்லை.
ஏனெனில் அவர்களுக்கு தெரியும் இங்கு இருப்பதால் வரி தான் தாம் சுமக்க வேண்டி வரும் என்பது. தமக்கு வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |