ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் மிகப்பெரும் பின்னணி! விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் - போட்டுடைத்தார் கப்ரால்
செயற்கையான கட்டுப்பாட்டினாலேயே ரூபாவின் பெறுமதி தற்போது வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எனினும் நீண்ட காலம் செல்லும் முன்னர் இந்த நிலைமை மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதிக வட்டிக்கு அமெரிக்க டொலர்கள்
மேலும் தெரிவிக்கையில், அதிக வட்டிக்கு வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதன் காரணமாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
அந்த பணத்திற்கு 25 சதவீதம் என்ற அதிக வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி சுமார் 80 ரூபாவிற்கும் அதிகளவில் உயர்ந்துள்ளது.
எனினும் அதன் பலன் குறித்த டொலர்களை வழங்கியவர்களுக்கே கிடைத்துள்ளது தவிர வேறு எவருக்கும் சென்றடையவில்லை.
விளைவுகளை அனுபவிக்கும் மக்கள்
இவ்வாறு அதிக நன்மை இருக்கும் போது, பணம் கொடுப்பவர்கள் உலக அளவில் அதிகளவானோர் இருக்கின்றனர்.
அதற்கான அனுகூலத்தை பெற்ற பின்னர், மீண்டும் அவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |