நாளை வெளியாகவுள்ள சுற்றறிக்கை! மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
கொள்கை வட்டி விகிதங்களுடன் வங்கிகள் வழங்கும் கடனுக்கான சராசரி வட்டி வீதத்தை குறைக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கூடிய நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்தை வட்டி விகிதங்கள் குறையும்
கொள்கை வட்டி விகிதங்கள் குறையும் முறை மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்கும் முறைக்கமைய, சந்தை வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் நினைத்தது போல் குறைக்கவில்லை என்றால், ஏதாவது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அப்போது அறிவித்தோம்.
அதற்கமைய, நாணய சபையின் கலந்துரையாடலுக்கமைய, வட்டி விகிதங்கள் ஏதோ ஒரு வகையில் குறைந்திருப்பதைக் கண்டோம்.
ஆனால் குறைப்பு விகிதம் இன்னும் போதுமானதாக இல்லாததால், கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் முன், கொள்கை வட்டி விகிதங்கள் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான ஏனைய நடவடிக்கைகளின் முழுப் பலனையும் சந்தை வட்டி விகிதங்களுக்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் வழங்க கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
இதனால் அதன் முழு விளைவுகளுக்கமைய, கொள்கை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, எப்படியாவது குறைப்பை விரைவுபடுத்தவும், மற்ற வட்டி விகிதங்களை சாதாரண வட்டி விகிதத்திற்கு இயல்பாக்கவும் எடுக்க வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் அடங்கிய சுற்றறிக்கை நாளை வெளியிட நாங்கள் நினைத்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |