இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
நாணயக் கொள்கை சபை நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டி வீத வீழ்ச்சி
மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், சந்தையில் வட்டி வீதம் வீழ்ச்சியடையும் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
