மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் இரண்டு மாதங்களாக தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து சேவைகள் வழமை போன்று நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பர்.
இதேவேளை, முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் பஸ் சேவைகள், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த 14 ஆம்திகதி மீள ஆரம்பிக்கப்பட்டது. எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதி முதல் நாளை (1) வரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிவரும் இரண்டாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
