முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
முல்லைத்தீவு (Mullaithivu) மாவட்டத்தின் மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது பாடசாலையின் அதிபர் இ.கோகுலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த போட்டியானது நேற்று (09.04.2024) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இல்ல மெய்வல்லுநர் போட்டியானது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அணிநடை மரியாதை, விளையாட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்ச்சிகள், பரிசில் வழங்கல் போன்றன சிறப்பாக நடைபெற்றுள்ளன.
வெற்றிக்கிண்ணங்கள்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிச் சான்றிதழ், வெற்றிப் பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது
குறித்த விழையாட்டு நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.