அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தீவிர சோதனை நடவடிக்கை
சுகாதார சட்டத்தை பின்பற்றுவது தொடர்பில் விசேட செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
மேல் மாகாணத்திலும் புறநகர் பகுதியிலுள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், கடை தொகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளையும் நடத்தி செல்லும் போது அரசாங்கம் விடுக்கும் சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடிக்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட பொலிஸ் செயற்பாட்டிற்காக சீருடை அணிந்த 400 இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சுகாதார இயக்குனர் நாயகத்தினால் கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி இந்த விசேட சுகாதார பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு முறையைப் பின்பற்றாத நிறுவனங்களை அடையாளம் கண்டு அதன் உரிமையாளர்கள், நிறுவனத்தின் பிரதானிகள், நிர்வாக அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளா