நாளை முதல் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்கானிப்பு நடவடிக்கை
மாவட்டங்களின் எல்லைகளில் நாளை முதல் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சமூக காவல் துறை அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாவட்டங்களுக்கு மாவட்டம் செல்வோரின் காரணங்கள் கேட்டறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டங்களின் எல்லைகளை கடப்பதற்கான காரணக் கடிதங்கள் இதன்போது கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காரணக் கடிதங்களின் அடிப்படையில் மாவட்டங்களின் எல்லைகளை கடப்பவர்களுக்கு பேருந்து வசதிகள் செய்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
எனவே மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அரச மற்றும் தனியார் துறையினர் தமது தனியார் அதிகாரிகளிடம் இருந்து உரிய காரணக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறை தலைமை அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால்
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
