யாழில் தீவிர டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை – சுகாதார அதிகாரிகள் அதிரடி பரிசோதனை
யாழ்ப்பாணம் - சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் ப. நந்தகுமார் பொறுப்பேற்ற பின்னர் சங்கானை பிரதேசத்தில் தொடர்ச்சியாக டெங்கு கட்டுபாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 02.06.2026ஆம் திகதி சுழிபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்களால் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இதன்போது டெங்கு நுளம்பு குடம்பி பெருக்கத்திற்கு ஏதுவாக சூழலை பேணிய ஒருவர் இனங்காணப்பட்டார்.

குறித்த நபரிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு 04.06.2026ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் ரூ.5000 தண்டம் விதித்துடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளார்.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்