கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான சொத்துக்கள்
கொழும்பு - தொட்டலங்க பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரும் அவருடைய கணவரும் சேர்ந்து கடத்தல் மூலம் ஈட்டிய சில சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
இதன்படி, சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட, தொட்டலங்க பகுதியில் உள்ள சுமார் 30 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.30 பேர்ச் நிலம் மற்றும் 0.75 பேர்ச் நிலம், மூன்று மாடி வீடு ஆகிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான முடக்குதல் உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(05.06.2026) முதல் 7 நாட்களுக்கு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்
YOU MAY LIKE THIS VIDEO
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri