இலங்கையில் தீவிரமடையும் மின்சார நெருக்கடி

weather fuel power cut
By Vethu Feb 22, 2022 03:20 AM GMT
Report

இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளமையாகும்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 22 வீதமாகவும், சமனல ஏரியின் நீர்மட்டம் 32 வீதத்திலிருந்து 9 வீதமாகவும், மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 45 வீதத்திலிருந்து 4 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

ரன்னெகல நீர்த்தேக்கத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

07 மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. களனிதிஸ்ஸ சுழற்சி மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெப்தாவும் நேற்று இரவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், தற்போது ஒரு சில மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரமே போதுமான எரிபொருள் இருப்பது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US