தீவிரமடைந்த போராட்டம்! கண்ணீர் புகைக்கும் கலையாத கூட்டம் (VIDEO)
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் இன்று ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றிரவு நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை பல மணி நேரமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.
மேலும்,கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,கொழும்பு - மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் வீடு முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர்.



