புலனாய்வுத்துறை வீழ்ச்சியே குற்றங்கள் அதிகரிக்க காரணம்: முன்னாள் பொலிஸ் அதிகாரி
பாதுகாப்பு சேவைகளின் புலனாய்வுத்துறைக் கட்டமைப்பில் வீழ்ச்சி காரணமாகவே நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான பிரியசாந்த ஜயகொடி இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
குற்றச்செயல்கள்
நாட்டில் தற்போது நாளுக்குநாள் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.
கொலை, கடத்தல், கப்பம், கற்பழிப்பு போன்றவை நாளாந்தம் நடக்கும் குற்றச்செயல்களாக மாறிவிட்டது.
பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் புலனாய்வுத்துறை பலமான முறையில் செயற்பட்டிருந்தால் குற்றங்களை கண்டறிந்து அவை நிகழ முன்னரே தடுத்திருக்க முடியும்.
ஆனால் குற்றங்கள் நடக்கும் வீதத்தைப் பார்க்கும் போது புலனாய்வுத்துறை கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |