எதிர்க்கட்சி எம்.பிக்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வு அமைப்புகள்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அறுபத்தாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை வழங்குவது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் கவனம் மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளது.
புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் இது தொடர்பில் சிறப்பு நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புலனாய்வு அமைப்புகள்
அதன்படி, கடந்த நேற்று (23) நாடாளுமன்றத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் , நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பிற பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற புலனாய்வு அமைப்புகள் அனுப்பப்பட உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam