15 ஆண்டுகளின் பின் மறுபெயரிடுதலை அறிவிக்கும் intel
இன்டெல் நிறுவனமானது 15 ஆண்டுகளின் பின் அதன் செயலிகளுக்கு மறுபெயரிடுதலை அறிவித்துள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிய பெயரிடலில் வெளிவரவிருக்கும் Meteor Lake (14th Gen Intel Core) செயலிகள் உற்பத்தி மற்றும் செயன்முறை முன்னேற்றங்களுக்கு இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு முதல், இன்டெல் நிறுவனம் அதன் நுகர்வோர் தயாரிப்புகளை, பிரதான மற்றும் முதன்மையாக வழங்கும் சலுகைகளை 2 பகுதிகளாக வேறுபடுத்தி வெளியிடவுள்ளது.
உயர் செயல்திறன் கொண்ட skuக்கள் அறிமுகம்
வழமையாக வெளிவிடப்படும் இன்டெல் செயலிகளில் உள்ள "i" என்ற எழுத்தை நீக்கிவிட்டு இன்டெல் கோர் i3 செயலியை கோர் 3 என்றும், இன்டெல் கோர் i5 செயலியை கோர் 5 என்றும், இன்டெல் கோர் i7 செயலியை கோர் 7 என்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய தயாரிப்புகளில், இன்டெல் கோர் அல்ட்ரா 5, இன்டெல் கோர் அல்ட்ரா 7 மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா 9 ஆகியவற்றில் உயர் செயல்திறன் கொண்ட skuக்கள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Introducing the Intel Core Ultra and Intel Core processor brands.
— Intel News (@intelnews) June 15, 2023
The new client branding begins with Intel’s upcoming Meteor Lake processors. Learn more. https://t.co/PTc58SjdKA
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |