வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை குறித்து வெளியான அறிவிப்பு
வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று (24) பணியகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்விடயத்தை வெளியிட்டுள்ளார்.
14 இலட்சம் அதிகரிப்பு
மேலும் அவர், இதுவரை, வெளிநாட்டில் பணிபுரியும் போது இறக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை 6 இலட்சங்கள் ஆகும்.
இந்நிலையில், தற்போது அதனுடன் ரூபா 1.4 மில்லியனைச் சேர்த்து 2 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கோசல விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



