ஓமானில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
ஓமான் (Oman) தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று (16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்தனர்.
இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மோதல் நிலைமை
இந்த நிலையில். அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை, குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் பொலிஸாரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
