பொலிஸ் அதிகாரிகளுக்கான விருந்தும் பரிசுகளும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொலிஸ் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கைகள்
இதன்படி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக் கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படும் பணத்தையோ அல்லது பரிசுகளையோ சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்கக்கூடாது.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri