நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, நாடாளுமன்ற செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
2010- முதல் 2018ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சொத்துக்களும் பொறுப்புக்களுமே சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று ஆணைக்குழு பணித்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்துள்ள கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளியிடுவதில் எவ்வித இரகசியங்களும் அடங்கியிருக்கவில்லை. அத்துடன் இது நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை பாதிக்கும் விடயம் அல்ல என்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தகவல்களை நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியபோதும் அதனை அவர் உரிய காலத்துக்குள் தராத காரணத்தினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இந்தப்பணிப்புரையை விடுத்துள்ளது





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
