நீர் கட்டணம் குறித்து யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நீர் கட்டணத்தைச் செலுத்தி நீர் துண்டிப்பைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் வழி நீர் இணைப்பை பெற்றுள்ள பொது மக்கள், தங்களின் மாதாந்த நீர்க் கட்டணப் பட்டியலை ஒரு மாத்திற்கு மேல் செலுத்தாது இருப்பின் அவர்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறும் வாடிக்கையாளர்களின் நீர் இணைப்பை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாதாந்த நீர்க் கட்டணம்
எனவே, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த
வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களது மாதாந்த நீர்க் கட்டணத்தை
செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam