அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிக்கப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (07.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

மாதாந்த கட்டணம்
இலங்கையில் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 29 இலட்சம் ஆகும்.
அந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாதாந்த கட்டணத்தில் 50 சத வீதம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam