ஓட்டமாவடி மக்களுக்கு பிரதேச சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஓட்டமாவடி, மஜ்மா நகர் கோவிட்19 விசேட மையவாடியினை பார்வையிட விரும்பும் அடக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ள முன்கூட்டியே கோறளை பற்று மேற்கு பிரதேச சபையின் அனுமதியினை பெறுவது கட்டாயமாகும் என பிரதேச சபையினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்காக உறவினர்கள் பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும்.
1. வருகை தருவர்களின் முழுப்பெயர்
2. அடையாளஅட்டை இலக்கம்
3. ஜனாஷா அடக்கப்பட்ட கப்ர் இலக்கம்
4. வருகை தரும் திகதி
என்பனவற்றை தெளிவாக 077 710 8383 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்புமாறும், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 0652257429 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பார்வையிட வருபவர்கள் கீழ் குறிப்பிடப்படும் விதிமுறைகளை பேனுவது அவசியமாகும்.
1. பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய அடக்கஸ்தல வளாகத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
2. முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கட்டாயம் பேணப்பட வேண்டும்.
3. தாங்கள் பிரார்த்தனை செய்வதற்காக வருகின்ற உறவினர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ர் அருகே செல்வது வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது
4. அடக்கஸ்த்தலத்தை போடோ , வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே அன்ரொயுட் தொலைப்பேசிகளை மையவாடிக்கு வருகின்ற வாகனத்தில் வைத்துவிட்டு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும்.
எனவும் கோறளை பற்று மேற்கு பிரதேச சபையினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.