நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்க வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கி
மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு தடையில்லாமல் எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின் மத்திய வங்கி எரிபொருள் இறக்குமதிக்கான டொலரை தாமதமில்லாமல் விடுவிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்தின் இறுதி காலப்பகுதிகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி கட்டம் கட்டமாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொள்ளும் விதம் குறித்து ஜனாதிபதி முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை ஆகிய இரு பிரதான துறைகளுக்கும் தடையில்லாமல் எரிபொருள் விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan