வவுனியாவில் கோவிட் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் நிறுவல்
கோவிட் -19 மூன்றாம் அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கோவிட் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வவுனியாவில் நிறுவப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை இன்று மாலை (12.05) இடம்பெற்றுள்ளது.
மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளைச் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களும் முன்னெடுத்துள்ளன. அந்தவகையில்,கோவிட் நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவோம்' எனப் பொறிக்கப்பட்ட பதாதைகள் வவுனியா புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்
வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்தியர் லவன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri