டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பு
முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா THREADS என்ற புதிய மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த செயலி நாளை மறுதினம் (06.07.2023) பயனர்களின் பாவனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்தச் செயலியிலும் தங்களுக்குப் தேவையான கணக்குகளை பின் தொடரலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் உள்ள அதே பயனர் பெயரை (Username) வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க் செய்யும் மாற்றங்கள்
டுவிட்டர் பக்கத்தில் அதன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகளை பார்வையிடலாம் என புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்க் செய்யும் மாற்றங்களுக்கு விமர்சனங்கள் குவியும் நிலையிலே, மெட்டா நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்ய முனைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Threads செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. எனினும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி எப்போது அறிமுகம் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
