பொலிஸ் மா அதிபர் விவகாரம் குறித்து சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!
பொலிஸ் மா அதிபர் விவகாரம் குறித்து பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை. ஏனெனில், அது சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்ததை தொடர்ந்தே ஜனாதிபதி சபாநாயகருக்கு இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.