கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த இந்திய கப்பலால் சீனாவிற்கு கடும் எச்சரிக்கை
இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு ஐஎன்எஸ் கரன்ஜி என்ற நீர்மூழ்கி கப்பலை அனுப்பியதன் மூலம், இந்தியா, சீனாவுக்கும் மாலைத்தீவுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் கடல்வள ஆராச்சியை மேற்கொள்ளும் முகமாக தமது ஆராய்ச்சி கப்பலான சியாங் யங் கொங் 3 என்ற கப்பலுக்கு அனுமதி வேண்டும் என்று முன்னதாக சீனா இரண்டு நாடுகளிடமும் கோரியிருந்தது.
எனினும் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு அதனை நிராகரித்தது மறுபுறத்தில் மாலைத்தீவில் சீன சார்பு ஆட்சியை கொண்டிருக்கும் அரசாங்கம் கடந்த 23ஆம் திகதியன்று சீனாவின் கப்பல் கோரிக்கைக்கு அனுமதியை வழங்கியது.
இரண்டு நாடுகளுக்கும் கடும் செய்தி
இதனையடுத்தே இந்த இரண்டு நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கையை கூறும் வகையில் இந்தியா 100 பேர் பயணிக்கும் தமது நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பியதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கப்பல் இன்று கொழும்பில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளது.
இதேவேளை சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் மாலைத்தீவுக்கு இந்த மாதம் 8ஆம் திகதி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam