துறைமுக நகர் வாக்கெடுப்பு குறித்து விசாரணை செய்யப்படும்! - சபாநாயகர்
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆளும் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் குறித்த சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சட்டமூலம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படும் தங்களது வாக்குகள் சரியான முறையில் கணக்கிடப்படுகின்றதா என்பது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தாம் பல தடவைகள் கோரியதாகவும் அவ்வாறு கவனம் செலுத்தியிருந்தால் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் வாக்கெடுப்பு முடிவுகளை சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவித்த காரணமாக முடிவுகளில் மாற்றம் செய்யக்கூடிய சாத்தியமில்லை என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.