திருமதி ஸ்ரீலங்கா போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் சூலா பத்மேந்திராவிடம் விசாரணை
திருமதி ஸ்ரீலங்கா போட்டியில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தில் ஈடுபட்ட மொடல் அழகி சூலா பத்மேந்திரா, குற்றப்புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தம்மிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் நேற்று ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக சூலா (Sula) தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள செய்தியாளர் கீர்த்தி ரத்நாயக்க குறித்து விசாரிப்பதற்காகவே தாம், குற்றப்புலனாய்வுத் துறைக்கு வரவழைக்கப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமொன்றின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளரான கீர்த்தி ரத்நாயக்க, தீவிரவாத தாக்குதல் குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளரான கீர்த்தி ரத்நாயக்கவுடன், மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே வாக்குமூலம் வழங்கியதாக சூலா குறிப்பிட்டுள்ளார்.
திருமதி ஸ்ரீலங்கா போட்டியின் பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட பல ஊடகவியலாளர்கள் தன்னை தொடர்பு கொண்டனர்.
கீர்த்தி ரத்நாயக்கவை தாம் இதுவரை சந்திக்கவில்லை, எனினும் அவருடன் தொலைபேசி அழைப்பில் பேசியது தொடர்பில் தன்னை கேள்வி கேட்பது நியாயமற்றது என்று சூலா கூறியுள்ளார்.





Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
