சர்வாதிகார சட்டத்தரணிக்கு கடிதம் அனுப்பிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணியொருவருக்கு அனுப்பிய கடிதத்தில் சர்வாதிகாரியின் சட்டத்தரணி என்று குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர், கடமையின் நிமித்தம் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் அரச சட்டத்தரணியொருவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேரடியான மன்னிப்பு
இதன் போது குறித்த சட்டத்தரணியை ஜனாதிபதி சட்டத்தரணி (ஜனாதிபதி நீதிஞ்ஞ) என்று விளிப்பதற்குப் பதில், தவறுதலாக சர்வாதிகாரியின் சட்டத்தரணி (ஏகாதிபதி நீதிஞ்ஞ) என்று விளித்துள்ளார்.
தற்போது சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடிதத்தில் நிகழ்ந்த தவறு குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணியிடம் பொலிஸ் அதிகாரி நேரடியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |