இறுதிநேர வருமான சமர்ப்பிப்பு : நெருக்கடிக்கு உள்ளான இறைவரித்திணைக்களம்

Sri Lanka Sri Lankan Peoples Inland Revenue Department
By Sivaa Mayuri Dec 01, 2024 06:11 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

2024 நவம்பர் 30 காலக்கெடுவிற்கு முன்னர் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய முயற்சித்தவர்களின் கடைசி நிமிட அவசரம் காரணமாக, உள்நாட்டு இறைவரித்திணைக்களம் ( Inland Revenue Department) நெருக்கடியை சந்தித்துள்ளது.

இணையத்தின் ஊடாக ஒரே நேரத்தில் 16,000 பேர் உள்நுழைந்தபோது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.

குறைந்த ஆற்றல் கொண்ட கணினிகளின் மூலம் உள்நுழைந்தோர், ஒரே நேரத்தில் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் சிரமப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம் : ஜனாதிபதி வலியுறுத்தல்

பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம் : ஜனாதிபதி வலியுறுத்தல்

இணைய முறையை அணுக முடியாத நிலை

பல முறை முயற்சித்த பின்னர், தமது கணினிகள் செயலிழந்துவிட்டதாகவும் பலர் முறையிட்டுள்ளனர்.

இறுதிநேர வருமான சமர்ப்பிப்பு : நெருக்கடிக்கு உள்ளான இறைவரித்திணைக்களம் | Inland Revenue Department In Crisis

எனினும், தாக்கல் செய்யும் செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும், அவையும் வெற்றிபெறவில்லை என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சில பகுதிகளில் மின்சாரம் இல்லாததால், இணைய முறையை அணுக முடியாத நிலையில் பலர் சிரமங்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயமாக இணையம் மூலமாகவே செய்யப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களம் அறிவித்திருந்தது.

 போதுமான கால அவகாசம்

அதேநேரம் ஆணையாளரிடம் முறையீடு செய்வதன் மூலம் கைமுறையாக தாக்கல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இறுதிநேர வருமான சமர்ப்பிப்பு : நெருக்கடிக்கு உள்ளான இறைவரித்திணைக்களம் | Inland Revenue Department In Crisis

முன்னதாக, அக்டோபர் 1 ஆம் திகதி முதல் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான அமைப்பு திறக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் கணக்குகளை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும், காலக்கெடுவிற்குப் பிறகு தங்கள் வருமானத்தை தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கணினி செயலிழப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தினால், ஆயிரக்கணக்கானோர் சரியான நேரத்தில் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய இயலாமை காரணமாக நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் இருந்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அநுர கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரும் மொட்டு கட்சி

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அநுர கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கோரும் மொட்டு கட்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US