அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பரீட்சையில் மொழி ரீதியான அநீதி: மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Commission Of Sri Lanka Vavuniya
By Thileepan Jul 02, 2024 09:49 PM GMT
Report

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் தமிழ் மொழி வினாத்தாளில் சிங்கள மொழியில் தரவுகள் வழங்கப்பட்டமையால் பரீட்சார்த்திகள் சிரமங்களை எதிர் கொண்டதுடன், இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 13 ஆம் மற்றும் 16 ஆம் திருத்தங்களில் சிங்களம் மற்றும் தமிழ் அரச கரும மற்றும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆங்கிலத்துக்கு இணைப்பு மொழி என்ற அந்தஸ்த்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெறுமனே எழுத்து வடிவில் இருக்கும் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறுபான்மை இனத்தவரை பெரிதும் பாதிக்கிறது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பரீட்சையில் மொழி ரீதியான அநீதி: மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Injustice In Examination Of Development Officers

30.06.2024 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முதலாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை நடாத்தப்பட்டது.

சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகள்

அதில் கணனிப் பரீட்சையில் விரிதாள் தொடர்பான கேள்விக்கான தரவுகள் முழுவதுமாக சிங்கள மொழியிலையே வழங்கப்பட்டதால், பரீட்சையை எதிர்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பரீட்சையில் மொழி ரீதியான அநீதி: மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Injustice In Examination Of Development Officers

பின்பு அதற்கான மொழிபயர்ப்பு செய்யப்பட்ட போதிலும் பரீட்சார்த்திகளின் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டமை எங்களுக்கான அநீதியாகவே உள்ளது.

இது பெரும்பான்மையாக சிங்கள மொழி பேசுபவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்களுக்கு பாதகமாகவும் இருந்ததை சுட்டிக்காட்ட விரும்புவதோடு, இவ்வாறான தவறு இனி இடம்பெறாதவண்ணமும் நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்பதோடு அதற்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில், குறிப்பாக சிறுபான்மை மக்களின் மொழி உரிமைகள் பற்றி பொது மக்களின் உணர்திறனும் மதிப்பும் குறைவாகவே உள்ளது.

அந்த வகையில், அனைத்து அரச நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அரச கரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தி மொழி ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US