முன்னாள் இளைஞர் மன்ற உறுப்பினரும், இளைஞர் கழக தலைவருமான ஆர்.ஆனந்தபாபு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
தேசிய இளைஞர் சேவை மன்றம் என்பது இளைஞர்களுக்கான திறன்கள் வளர்ச்சி, சுயமரியாதை மற்றும் சமத்துவ வாய்ப்புகளுக்கான ஒரு மேடையாக இருக்க வேண்டும், ஆனால் மலையக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை முறைப்பாடாக தடுக்கின்ற ஒரு அரசியல் கருவியாக இம்மன்றம் மாற்றப்பட்டிருப்பதை நாங்கள் கவலையுடன் காண்கிறோம் என முன்னாள் இளைஞர் மன்ற உறுப்பினரும், இளைஞர் கழக தலைவருமான ஆர்.ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு இளைஞர் கழகங்களில் சேரும் வாய்ப்பு குறைக்கப்பட்டு, ஒரு கிராமத்திலிருந்து வெறும் கிராம சேவை பிரிவை மட்டுமே உள்ளடக்கிய வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இது மட்டும் அல்லாமல், இவ்வேலைகள் எல்லாம் அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளர் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அதிகாரபூர்வ நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் நம்பிக்கை
இது ஒருபுறம் அரசியல் நலனுக்காக இளைஞர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்கச் செய்கிறது. இது இளைஞர்களின் நம்பிக்கையைப் பிய்த்துவிடும் நடவடிக்கை. நாம் வாக்களித்தது மாற்றத்திற்காக - அதாவது சமத்துவமான, ஜனநாயகமிக்க ஒரு நாட்டிற்காக. ஆனால் இப்போது நாடாகவே சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
நாங்கள் கேட்டது, அனைத்து இளைஞர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மலையக இளைஞர்களுக்கும் மற்றைய சமூக இளைஞர்களைப் போன்று உரிய இடம், உரிமை என்பன வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் தனது அரசியல் விருப்பங்களுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
மலையக இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இளைஞர் சேவை மன்றம் அரசியல் தாண்டி, மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். ஜனாதிபதி தங்கள் வாக்குறுதிகளை வாய் வார்த்தைகளாக விட்டுவிடாமல், செயலில் காட்ட வேண்டும். மலையக மக்களும் இந்த நாட்டின் பூரண குடிமக்கள் என்பது உண்மையில் நெஞ்சிலிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஒரு இளைஞர் கழகம்
ஆனால் தற்பொழுது ஒரு கிராமசேவர் பிரிவுக்கு ஒரு இளைஞர் கழகம் பதிவு செய்தால் எங்களுடைய கிராமத்தில் ஒன்பது தோட்டபுறம் காணப்படுகின்றது ஒன்பது தோட்டப் புறங்களில் 6000 வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்த எண்ணிக்கையில் பார்த்தால் பத்தாயிரம் பொதுமக்கள் இளைஞர்கள் குழந்தைகள் என இவர் இருக்கின்றன இவ்வாறு ஒரு கிராமசெயலாளர் ஒரு பிரிவுக்கு பத்தாயிரம் பேர் இருக்கும் அந்த மக்களுக்கு ஒரு இளைஞர் கழகம் உத்தமமா என்று அறிவார்ந்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
எடுக்கும் தீர்மானம் யாருக்கும் பக்க சார்பற்ற சமத்துவமான நியாயபூர்வமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் நியாயமாக பேசிக்கொண்டு செயலில் அநியாயத்தை செய்யும் அரசாங்கத்தை தற்போது நாங்கள் காண்கின்றோம். இதற்கான உரிய நடவடிக்கை அரசனது மறுசீரமைப்பு செய்து தராவிட்டால் அதற்கான மாற்று வழிகளையும் எழுதுகிறவர் ஆகிய நாங்கள் மேற்கொள்வோம் என்பது தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




