கிளிநொச்சி வீதி விபத்தில் காயமடைந்த ஆசிரியை உயிரிழப்பு
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு (20.08.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21.08.2023) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியையுமான ஜீவரஞ்சினி (ஜீவா ரீச்சர்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காருடன் மோதியதில் விபத்து
நேற்று (20.08.2023) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கிப் பயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும்போது எதிர் பக்கம் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த ஆசிரியை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam