விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் : சத்திர சிகிச்சையில் கால்கள் துண்டிப்பு (Photos)
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (10.08.2023) இடம் பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும் லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கந்தளாய் -லீலாரத்ன பிரதேசத்தை சேர்ந்த ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் (23வயது) எனவும் பொலிஸார் மேலும், தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை இன்று (11.08.2023) சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய போது இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக விபத்து சேவை பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
