உயிருக்கு போராடிய பாத்தியா யானை உயிரிழப்பு
வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடி வந்த பாத்தியா என்ற யானை இன்று காலை (15) இறந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தினர் அறிவித்துள்ளனர்.
பொல்பிதிகம பகுதியில் உள்ள நீர் நிலையில் விழுந்த யானையின் கழுத்தில் குண்டு பாய்ந்ததால் அதன் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருந்தது.
கடுமையான காயங்கள்
பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் அசோக டாங்கோல்லா தலைமையிலான குழு, யானை பாத்தியாவுக்கு சிகிச்சை அளிக்க கடுமையாக போராடினர்.

இவ்வளவு காலமாக படுத்திருந்த யானை நேற்று (ஜூலை 14) மறுபுறம் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அதன் நிலையை மாற்றிய பிறகு, எதிர்பார்த்ததை விட பல கடுமையான காயங்கள் அதன் மீது காணப்பட்டதாக பேராசிரியர் அசோக டாங்கோல்லா தெரிவித்தார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri