வடக்கு மாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேண பொலிஸாரின் புதிய செயற்றிட்டங்கள்
வடக்கு மாகாணத்தில் (Northern Province) வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஓட்டுநர்களுக்கும் பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், அடையாளம் காணப்பட்ட இடங்களில் புதிய போக்குவரத்து அறிகுறி பலகைகளை நிறுவுதல் மற்றும் வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸாரின் நோக்கம்
வடமாகாணத்தை அதிகபட்சமாக வீதி ஒழுக்கத்தை பேணும் மாகாணமாக மாற்றுவதே பொலிஸாரின் நோக்கமாகும் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam